மதுக்கடைகளை அரசுடமை நிறுவனமாக மாற்றி, ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியிலும் பார்த்து பார்த்து கடைகளை அமைத்து, அதற்கான ஊழியர் குழுவை அமைத்து, வருபவர்களுக்கு சந்தோஷத்தை அள்ளி தரும் வகையில் விதவிதமான பானங்களை இறக்கி, குளிரூட்டப்பட்ட அறைகளிலும் வெட்ட வெளி தோட்டங்களிலும் மதுக்கடை நடத்தி வரும்பொழுது..திடீரென்று பொதுமக்கள் வீடுகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளுக்காக மதுக்கடைகளை மூட சொன்னால் என்ன ஆவது அரசு கஜானா ?
காவல்துறையும் அரசுடமை, மதுக்கடைகளும் அரசுடமை - காவல்துறை உதவி செய்யாவிடில் பிறகு யார் செய்வது ? பொதுமக்கள் எப்படியும் சில தினங்களில் அவர்கள் வீட்டில் ஒரு வயது பெண்ணின் வாழ்க்கையை குறித்தோ அல்லது படிக்கும் ஒரு சிறுவனின் பள்ளிகூட கட்டணத்தை குறித்தோ அல்லது வீட்டில் இருந்து வெளியில் செல்லும் தனது கணவனின் நிலை குறித்தோ கவலைப்படும் போது இதனை மறந்து விடுவார்கள்...அதுவரை காவல்துறை பாதுகாப்புடன் நடக்கும் கடைகள் அதன் பிறகு பாதுகாப்பின்றியே குடிமகன்களை உருவாக்கும் பணியை செவ்வனே செய்யும் !
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையிலே ! !
No comments:
Post a Comment